×

பள்ளிபாளையத்தில் எல்லை பிரச்னை போட்டி போட்டுக்கொண்டு குப்பைகளை குவிப்பதால் அதிர்ச்சி

பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில் நாற்றத்தின் நெடி தாங்க முடியாமல் குப்பையை அகற்றும்படி பொதுமக்கள் கோரிக்கை வைத்தபோதும் மேலும் குப்பைகளை கொட்டி குவித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பள்ளிபாளையம் ஒட்டமெத்தையிலிருந்து குமாரபாளையம் செல்லும் சாலையின் ஒருபுறம் நகராட்சியின் எல்லையாகவும் மறுபுறம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஊராட்சி எல்லையாகவும் உள்ளது. நகராட்சி பகுதியில் உள்ளவர்களும் எதிரே உள்ள ஊராட்சி எல்லையில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இந்த எல்லை பிரச்சினையால் சுகாதார சீர்கேடு அபாயம் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நகராட்சி நிர்வாகமோ இது எங்கள் எல்லை இல்லை என்கிறது. ஊராட்சி நிர்வாகமோ இதற்கான துப்புரவு பணியாளர்கள் வாகனம் எங்களிடம் இல்லை என்கிறது.

வீடுகளில் இருந்து வெளியாகும் குப்பை கழிவுகள் அனைத்தும் சாலையோரம் கொட்டப்படுகிறது. இது போதாதற்கு ஊராட்சியில் உள்ள மற்ற பகுதிகளில் உள்ள குப்பைகளை சேகரிக்கும் துப்புரவு தொழிலாளர்கள் பிரித்து வாங்கிய குப்பைகளை மொத்தமாக கொண்டு வந்து ஒன்றாக சேர்த்து கொட்டிவிட்டு செல்கின்றனர். நாற்றமெடுத்து சுற்றுப்புற மக்களின் சுகாதாரத்தை கெடுப்பதால் குப்பையில் தீயை வைத்து எரித்து காற்றை மாசுபடுத்துவதாக புகார் எழுந்துள்ளது. குவிந்த குப்பைகளை அகற்றுவதை விட்டுவிட்டு எங்கேயோ சேகரித்த குப்பைகளையும் இங்கு கொண்டு வந்து கொட்டி குவித்துவிட்டு போகும் துப்புரவு பணியாளர்களின் செயல் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. எனவே, “இப்பகுதியில் ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் குப்பை கொட்டக்கூடாது” என சிறப்பு அறிவிப்பு பலகை வைக்க திட்டமிட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags : school , Controlling ,border,school, trash
× RELATED உக்ரைனின் கார்கிவ் நகரில் அமைந்த முதல் ‘பங்கர் பள்ளி